போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களின் குறுந்தகடுகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையரகத்திலுள்ள கலந்தாய்வுக் கூடத்தில் ,போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்களின் குறுந்தகடு வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறுந்தகடை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு சைமர் கிரைம் தொடர்பாக மூவாயிரத்து அறுநூற்றி 32 புகார்களும், வங்கி மோசடி தொடர்பாக நான்காயிரத்து அறுநூற்றி 36 புகார்களும் வேலை தருவதாக மோசடி தொடர்பாக ஐந்நூற்றி 44 புகார்களும் வந்துள்ளதாக தெரிவித்தார். சென்னையில் பத்து இடங்களில் நிறுவனம் அமைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளதாகவும் அவர் பேசினார்
Discussion about this post