திண்டுக்கல் மாவட்டத்தில், புதிய ஹைபிரிடு ரகமான கத்தரிக்காய் நோய் தாக்குதல் இல்லாமல் விளைவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தொழில்நுட்பமான பசுமைகுடில் அமைத்து அதன் உள்ளும், வெளியிலிலும் நிலப்போர்வை முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து சிம்ரன் என்ற ஹைபிரிடு கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. குறைந்த அளவு தண்ணீரில் சொட்டு நீர் மூலம் நீர்ப்பாசனம் செய்வதால் கத்தரிக்காய் செடிகள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து, செடியில் கொத்துக்கொத்தாக காய்கள் காய்க்கின்றன. தற்போது கிலோ 40 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்று வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சிம்ரன் ரக கத்தரிக்காயை பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
Discussion about this post