அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் அநேக இடங்களில் அனல் காற்று வீசி வருவதால், வரும் 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post