காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இதையடுத்து காஷ்மீர் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பட்காம் மாவட்டம் காஜிபுரா பகுதியில் புகுந்த 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல், ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். ஒரு மாதகாலம் விடுப்பில் இருந்த யாசின் கடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Discussion about this post