மத்திய அரசு அறிவித்த நிதியுதவியின் முதல் தவணை 2 கோடி சிறுகுறு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்க கூடிய சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் துவக்கி வைத்தார்.
இந்தநிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கடந்த 11 நாட்களில் நாடு முழுவதும் உள்ள 2 கோடி சிறுகுறு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் முதல் தவணைக்கான 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஏன் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைக்க மறுக்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post