தோவாளை மலர் சந்தையில் மல்லிகை விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் மிகப் பெரிய அளவிலான மலர் சந்தை உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பூ வியாபாரிகள் இங்கு பூக்களை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ, ஒரு கிலோ 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
Discussion about this post