நான்கு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், டெல்லி அஷர்தம் கோயில், நொய்டா சாம்சங் ஆலை உள்பட பல்வேறு இடங்களுக்கு நேற்று சென்று பார்வையிட்டார். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற மூன் ஜே இன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை தென்கொரிய அதிபர் மூன் ஜே சந்தித்து பேசுகிறார். இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை குடியரசு தலைவரை, மூன் ஜே இன் சந்திக்க உள்ளார். இதையடுத்து, சுற்றுப்பயணத்தை முடித்து நாளை தென் கொரியா புறப்படுகிறார்.
Discussion about this post