மதுரை உலக தமிழ் சங்கத்தில் ஏசி கூட்ட அரங்கு, நூலகம், ஆராய்ச்சி அரங்கு அமைக்க 12.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரையில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது. மேலும் தமிழ்ச் சங்க மேம்பாட்டுக்கு தமிழக அரசு தேவையான நிதியுதவிகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post