குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், வீட்டை வீட்டு யாரும் தனியாக வர வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நான்ச் தேயிலை தோட்ட பகுதிகளில் சமீப காலமாகவே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை குடியிருப்பு பகுதியின் அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் மேய்சலுக்காக விட்டுள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை, மாட்டை கடித்தது. இதில் மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அவர்கள் வருவதற்குள் சிறுத்தை தப்பியது. சிறுத்தை கடித்ததில் பசுமாடு உயிரிழந்தது. இதனை அறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், பொது மக்கள் யாரும் தனியாக வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post