திருச்சி ரயில்வே ரயிலையத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், ரயில் நிலையம் முன்பு காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரம்பரியமிக்க பழைய நீராவி ரயில் இன்ஜின் அகற்றப்பட்டது. திருச்சி ரயில்வே ஜங்ஷன் நுழைவு வாயில் மற்றும் முகப்பு பகுதிகள் 30 கோடி ரூபாயில் அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நுழைவுவாயிலில் பிரம்மாண்ட வளைவு, செயற்கை நீரூற்று பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய நீராவி எஞ்சின் தற்காலிகமாக அகற்றப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அழகுபடுத்தும் பணிகள் முடிந்த பிறகு, மீண்டும், ரயில் என்ஜின் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post