வரி விதிப்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து, இந்தியாவிற்கு வழங்கப்பட்ட சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர் டிரம்ப், இந்தியா-அமெரிக்கா இடையே, இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால், அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்தியாவின் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்தியா, பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்தையும் அமெரிக்கா ரத்து செய்யும் என்றும் எச்சரித்துள்ளது.
Discussion about this post