கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், இதனால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அவர் அளித்தார். உமேஷ் ஜாதவ், பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.க வில் இணைய இருப்பதாகவும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Discussion about this post