மக்களவை தேர்தலை முன்னிட்டு மத்தியபிரதேசத்தில் பிரமாண்ட இருசக்கர வாகன பேரணியை பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மத்திய பிரதேசத்தின் உமாரியாவில் பாஜக சார்பில் பிரமாண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், பேரணியிலும் அவர் பங்கேற்றார். பாஜகவின் வெற்றிக்கான தீர்மானம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.
Discussion about this post