மகா சிவராத்திரியையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் துவங்கியுள்ள 22வது நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு துவங்கியுள்ள 22வது நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வரும் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது.நிகழ்ச்சியில் திருவாரூர், சென்னை, மும்பை, கோவை, பெங்களூரு, கொச்சி, துபாய் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக சென்னை நிரித்ய ஷேத்ரா டான்ஸ் அகாடமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பாலக்காடு, கோவை, திருவாரூர், சிதம்பரம் குழுவினர்களின் பரதநாட்டியமும் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Discussion about this post