தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள 384 டிப்ளமோ மருத்துவ படிப்புகள் பட்டப்படிப்புகளாக மாற்றபட்டுள்ளதாக அமைச்சர் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன், மற்றும் நீரிழிவு பரிசோதனைக் கருவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக மருத்துவ கல்லூரிகளில் இருந்த 384 டிப்ளமோ மருத்துவ படிப்புகள் பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 400 உதவி பேராசிரியர்களுக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மாற்று திறனாளி நோயாளிகளுக்கென தனி கழிப்பறை வசதிகள் படிப்படியாக செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post