தூத்துக்குடி, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமைக் கழகம் நியமித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த செல்லபாண்டியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜுவும், தெற்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ. சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு, பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் விடுவிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏ. சண்முகநாதன் மற்றும் புத்திசந்திரன் விடுவிக்கப்பட்டு, புதிய அமைப்பு செயலாளராக உடுமலை ராதாகிருஷ்ணனும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன், மற்றும் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post