மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் அதிமுக ஒன்றியம் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், புடவைகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
2 ஆயிரம் பேருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. கோலியனூர் ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post