சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பிவரும் அறப்போர் இயக்கம், அதுகுறித்து பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துக்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து பரப்பி வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மீது, அவ்வியக்கம் அவதூறான தகவல்களை பரப்பியது. இதைக்கண்டித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் அவ்வியக்கத்துக்கு தடைவிதிக்கக்கோரியும் தன் புகழுக்கு களங்கம் கற்பித்தற்காகவும், 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குதொடுத்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், அறப்போர் இயக்கமும், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனும் வரும் மார்ச்-8ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார். முன்னதாக, முகாந்திரம் அற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக, சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் பல்வேறு நிறுவனங்கள், அறப்போர் இயக்கம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post