ஜம்மு – காஷ்மீரின் புட்காம் பகுதியில் இந்திய விமானப் படையின் மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரக போர் விமானம் ரோந்து பணியில் இரண்டு விமானிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரால் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்தது. இதில் விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், மற்றும் உள்ளூர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post