நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில், 33 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மண்பாண்ட தொழில் கூடம் திறக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி பகுதியில், வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக மண்பாண்டத் தொழில் உள்ளது. மண்பாண்டம் தயாரிப்பதற்கு போதுமான இடம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த இவர்கள், புதிய தொழில் கூடத்தை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, 33 லட்சம் ரூபாய் செலவில், புதிய கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. புதிய கட்டடம் கட்டப்பட்டு, மண்பாண்டக் கூடம் தயார் நிலையில் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நியூஸ் ஜெ தொலைக்காட்சி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் விளைவாக தற்போது மண்பாண்டம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
Discussion about this post