நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அந்நிய சக்திகளின் குறுக்கீடு இருக்க கூடாது என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுடன் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுராக் தாக்கூர் இன்று ஆலோசனை நடத்தினார். சுமார் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாகூர், நாடாளுமன்ற தேர்தலில் டுவிட்டர் மூலமாக அந்நிய சக்திகளின் குறுக்கீடு இருக்க கூடாது என அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
இதேபோன்று பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவன அதிகாரிகளுக்கும் மார்ச் 6 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் கூட்டத்தில் பயனாளர் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
Discussion about this post