புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருப்பதற்கான நம்பகமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர் ஈடுபட்டிருப்பதற்கான நம்பகமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் உடனடியாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட ஒருவாய்ப்பாக இந்திய பிரதமர் இதை அளிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 19ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா தங்களை தாக்கினால் பாகிஸ்தான் பதிலடிக் கொடுக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post