டெல்லியில் நடைபெற்ற 33வது ஜி.எஸ்.டி கூட்டத்தில், பல்வேறு அதிரடியான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற 33வது ஜி.எஸ்.டி கூட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் வகையில், 45 லட்சம் ரூபாய்க்குள் வாங்கப்படும் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி, 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 45 லட்சத்திற்கு மேல் வீடு வாங்குபவர்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 380 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும், 70 விதமான சேவைகளுக்கும், வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு ஆகியவை செய்யப்பட்டுள்ளதாக, கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Discussion about this post