தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பங்கினை பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் புகழ்ந்துள்ளார். சிறந்த நிர்வாகியாகவும், கருணை உள்ளம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று அவர் கூறியிருக்கிறார். செயல்படுத்திய நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்திருப்பதாக பிரதமர் புகழ்ந்துள்ளார்.
Tributes to Jayalalithaa Ji on her birth anniversary. Her contribution towards the development of Tamil Nadu will be remembered for generations. A fine administrator and compassionate leader, her welfare measures benefitted countless poor people.
— Narendra Modi (@narendramodi) February 24, 2019
தமிழக முன்னேற்றத்தில், ஜெயலலிதாவின் பங்களிப்பு பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
Discussion about this post