டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு டெல்லி அரசில் அதிகாரம் இல்லை என்றும், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆளுநர் – முதலமைச்சர் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேசிய தலைநகரில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்டவை மத்திய அரசிடமே இருக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், மற்றொரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை அளித்த காரணத்தால், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post