இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை நடக்கிறது. இந்நிலையில் விசாகபட்டினத்தில் கேப்டன் விராட் கோஹ்லியிடம், இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை ஆட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கேப்டன் விராட் கோஹ்லி, “முதலில் தீவிரவாத தாக்குதலில் வீரர்களை இழந்து வாழும் குடும்பத்திற்கு அணி சார்பாக எங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்… போட்டி குறித்து அரசும், பிசிசிஐயும் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.. நாங்கள் எப்போதும் தேசத்தின் பக்கம் நிற்போம்” என்று கூறினார்.
Discussion about this post