ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையானது புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, மே மாதம் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிப்பது பாகிஸ்தானுடனான லீக் ஆட்டத்தை தவிர்ப்பது தொடர்பான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ வலியுறுத்த உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாக தலைவர் வினோத் ராய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தொகையானது புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post