சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன், ஜக்காம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு வந்த அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்நிலையில், ராஜேந்திரனின் மரணம் குறித்து தகவல் அறிந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் , மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் சண்முகம் ஆறுதல் தெரிவித்தார்.
Discussion about this post