உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் மோதும் போட்டியைத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனல் பறக்கும். ஆனால் சமீபத்தில் காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் வீர மரணமடைந்தனர்.
இதனால் தற்போதுள்ள சூழலில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத்தான் இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது, பாகிஸ்தான் அணியை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தநிலையில் உலகக் கோப்பையில் மற்ற போட்டிகளை விட இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த போட்டி நடைபெறும் மைதானம் மொத்தம் 27000 இருக்கைகள் கொண்டது. இதுவரை 4 லட்சம் ரசிகர்கள் போட்டியைக் காண விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியை காணவே 2.7 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post