இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனம் “SWIGGY”. குறிப்பிட்ட நிமிடத்திற்குள் மொபைல் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து சேர்வதால் இத்தகைய நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்களை தினமும் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இங்கு ஸ்விக்கி நிறுவனம் எல்லாரும் ஆச்சரியப்படுகிற மாதிரி ஒரு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த பார்கவ் ராஜன் உணவு ஆர்டர் செய்வதற்காக swiggy-யில் அருகாமையில் உள்ள உணவகத்தை தேர்வு செய்துள்ளார். ஆனால் அவரின் நேரமோ என்னவோ, அவர் தேர்வு செய்த உணவகத்தின் பெயரைப் போல மற்றொரு உணவகம் ராஜஸ்தானில் இருந்துள்ளது. ஆம்..நீங்கள் நினைப்பது சரிதான். பார்கவ் ராஜன் தேர்வு செய்தது ராஜஸ்தான் உணவகத்தைத் தான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த உணவு ஆர்டரை பிரபாகரன் என்ற நபர் பிக்அப் செய்து டெலிவரி செய்ய ராஜஸ்தானில் இருந்து கிளம்பி விட்டதாகவும், 12 நிமிடத்தில் அந்த சுவையான உணவு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என ஸ்விக்கி ஆப் காட்டியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பார்கவ் ராஜன் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் ஸ்விக்கி நிறுவனத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்ட ஸ்விக்கி நிறுவனம், ” இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி என பதிலளித்துள்ளது.
Discussion about this post