இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், டிஜிபி அலுவலகத்தில் ரோபோ பணியமர்த்தப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் இந்த புதிய ரோபோவை முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு தேவையான உதவிகளை இது செய்ய உள்ளது. குறைகள் தொடர்பாக எந்த அதிகாரியை சந்திக்க வேண்டுமோ அவர்களை சந்திக்க தேவையான அனைத்து விவரங்களையும் இந்த ரோபோவிடம் பெற்றுக் கொள்ளலாம். ரோபோவிடம் நேரடியாக கேட்டோ அல்லது அதிலுள்ள பட்டன்களை அழுத்தியோ விவரங்களை பெற முடியும்.
Discussion about this post