வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது நினைவாக இறந்தவர் பயன்படுத்திய பொருட்களை பத்திரப்படுத்தி வைப்போம்.
இது போன்று பிரிட்டன் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot தனது கணவரான Derek Loudfootஇன் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருமுறை உடல் நலமில்லாதபோது அவரது குடலின் ஒரு பாகத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்ற, அதை ஒரு பாட்டிலில் ஃபார்மால்டிஹைடில் போட்டு பத்திரமாக வைத்துக் கொண்டார் Derek.
Derek இறந்தபின், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததன் நினைவாக தனது கணவரின் குடலை பத்திரமாக வைத்திருக்கிறார் Tina. தான் இறக்கும்போது தன் கணவரின் குடலை தன்னுடன் புதைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Discussion about this post