மதுரை மக்களின் கோரிக்கையை ஏற்று வைகை ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகளை கட்டி வருகிறது தமிழக அரசு…
மீனாட்சி அம்மன் கோயில். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு என ஆன்மிக சிறப்பு வாய்ந்தது மதுரை மாநகர்.மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தான் தற்போது ஒவ்வொரு செங்கற்களாக அடுக்கி நிறைவேற்றப்பட்டு வருகிறது.ஆம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கோரிக்கை தான் அது.நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏவி பாலம், ஒபுலாபடித்துறை பாலம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தடுப்பணைகளை 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர் பொது பணித்துறையினர்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்ததால் வைகை ஆற்றில் நீர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதால், கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் வைகை ஆற்றில் புதிய தடுப்பணைகள் கட்டி முடிக்கப்படும்பட்சத்தில் 300 மில்லியன் கனஅடி வரை நீர் தேக்கிவைக்க முடியும்.இதனால் மதுரை மாநகரின் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருள தேவையான நீரும் கிடைக்கும்…
இதேபோல் வைகை ஆற்றை அழகுபடுத்துவதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரு கரைகளிலும் பூங்காக்கள், சாலை அமைத்தல் ஆகிய பணிகளும் நடைபெற்று வருகிறது.
Discussion about this post