கிராம்பு விலை விழ்ச்சியடைந்துள்ளதால் குமரி மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் முக்கிய நறுமண பயிர்களில் ஒன்று கிராம்பு. தமிழகத்தில் மிதமான தட்பவெட்ப நிலையுடன் காணப்படும் குமரி மாவட்டத்தில் பாலமோர், மாறாமலை, காரிமணி உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட ஹெக்டரில் கிராம்பு பயிரிடப்படுகிறது. தற்போது கிராம்பு அறுவடை செய்யபடுட்டு வரும் நிலையில், சந்தைகளில் போதிய விலை கிடைக்காதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தோனேஷிய போன்ற நாடுகளில் இருந்து கிராம்பு இறக்குமதி செய்யப்படுவதால் இங்கு அறுவடை செய்யபடும் முதல்தரமான கிராம்பிற்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறும் விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Discussion about this post