தமிழகத்தில், 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டார். சுகாதாரத்துறை புதிய செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநராக கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையராகவும், நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
பத்திரப்பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும், பத்திரப்பதிவு புதிய ஐஜியாக பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியர் ஹரிகரன், நகராட்சி நிர்வாக சிறப்பு செயலாளராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கோவை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஆட்சியராக சிவராசும், புதுக்கோட்டை ஆட்சியராக உமா மகேஸ்வரி, திருவாரூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஆனந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post