ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் புத்காமில் உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதை நடத்தப்பட்டு, வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறுதி சடங்குகளில் திரளான மக்கள் கலந்து கொண்டு வீரர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post