காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டிக்கும் விதமாக காஷ்மீரின் லே பகுதியில் பொதுமக்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில், தீவிரவாதிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, தேசிய கொடியை ஏந்தியாவாறு ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post