மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக தன்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் அமையவுள்ள பா.ஜ.க. கூட்டணி குறித்து பேசுவதற்காக சென்னை வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கூறிய பியூஷ் கோயல் தமிழ்நாட்டுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அரசியலில் எதுவும் நடக்கலாம் எனக் கூறினார்,
Discussion about this post