திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பள்ளி மாணவியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கொத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் சரிதா. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சரிதா, கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. சரிதா காணாமல் போனது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கீச்சலம் கிராமம் அருகே சரிதாவின் உடலை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் தடயவியல் நிபுணர்கள், மாணவியின் எலும்புக்கூடு, பள்ளி சீருடை ஆகியவற்றை சேகரித்தனர்.
மருத்துவ குழுவினர் அதே இடத்தில் உடல் கூறு ஆய்வு மேற்கொண்ட போது மாணவி அணிந்திருந்த மோதிரம், கால் கொலுசும் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் மாணவி சரிதா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சங்கரய்யா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சங்கரய்யா மாணவி சரிதாவின் தாய்மாமா ஆவார். சரிதாவை சங்கரய்யா,திருமணம் செய்ய விரும்பியதாகவும் இதற்கு சரிதா மறுப்பு தெரிவித்ததால் கடத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Discussion about this post