கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
பிளாஸ்டிக் பைகள் தடையை அடுத்து, வாழையிலை உள்ளிட்ட இயற்கை பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாழை இலை விற்பனை அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டு வாழையிலை 2 ஆயிரத்து 500 முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆவதாக மதுரை மாவட்டத்திலுள்ள, சென்மார்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் இலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உணவு விடுதிகளில் வாழையிலையின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post