2019 ம் ஆண்டும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். 16 வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, பல்வேறு கட்சித்தலைவர்கள் நிறைவுரை ஆற்றினார்கள். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான முலாயம் சிங் யாதவ் பேசும் போது , பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என நம்புவதாக தெரிவித்தார். முலாயம் சிங் இவ்வாறு பேசியவுடன் அவருக்கு உடனடியாக நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரதமர் மோடி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
முலாயம் சிங்கின் அருகில் இருந்த சோனியா காந்தியின் முகம் இறுக்கமாக மாறியது. உத்திர பிரதேசத்தில், முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ், மாயாவாதியுடன் இணைந்து பாஜகவை தோற்கடிக்க திட்டமிட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் முலாயம் சிங்கின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post