ஏழை எளிய மாணவர்கள் சிறந்த கல்வியை பெறும் விதத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று கூடியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். சட்டமன்ற உறுப்பினர் சத்தியா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை கொண்டு வந்து தனியார் பள்ளிகளை மிஞ்சுகிற அளவுக்கு தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக் காட்டினார். மேலும் பண்ரூட்டி பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post