காதல் ஜோடியை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தீரன் சின்னமலைப் பேரவையின் மாநில தலைவர் யுவராஜ், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஹேமலதா – பாலாஜி என்பவர்கள் காதலித்து வந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், காதல் ஜோடியை, யுவராஜ் உட்பட 3 பேர் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கில், யுவராஜ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post