கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
திருவாட்டார் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட முகிலன்கரை அரசு துவக்க பள்ளி ஒரு கிராம பகுதியில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில், பெரும்பாலும் ஏழை எளியோரின் பிள்ளைகளே பயின்று வருகின்றனர். இந்தநிலையில் இன்று பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு உள்ளூர் கிராம மக்களுக்கும், முன்னாள் மாணவர்களும் இணைந்து மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர். சீர் வரிசை பொருட்களுடன் வந்த கிராம மக்களை மேளதாளத்துடன் வரவேற்று சீர்வரிசை ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post