நில முறைகேடு வழக்கில், ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா இன்று ஆஜராகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில், ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலமாக குறைந்த விலைக்கு முறைகேடாக வாங்கியதாக, ராபர்ட் வதேரா நிறுவனம் மீதான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மவுரீன் ஆகியோருக்கு ராஜஸ்தான் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இருவரும் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இன்று காலை ஆஜராகி விளக்கமளிக்க இருக்கின்றனர்.
Discussion about this post