நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகத்தில் தானியங்கி புகைப்படக் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
இந்த கணக்கெடுப்புக்காக இருநூறு இடங்களில் 400 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் நடமாடும் புலிகள் இந்த கேமராவில் துல்லியமாக பதிவாகும். இந்தப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு புலிகளின் உடலில் உள்ள கோடுகள் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் புலிகளின் எண்ணிக்கையை எளிதாகக் கணக்கிட முடியும். மற்ற பகுதிகளிலும் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மொத்த புலிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post