தேனியில், அரசு விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தேனியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 87 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில், 800 பயனாளிகளுக்கு, தாலிக்கு தங்கம் மற்றும் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2 கோடியே 3 லட்சம் மதிப்பில் 812 பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியத்தையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இதில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய துணை முதலமைச்சர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த மகளிர் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
Discussion about this post