நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஆர்வமுடன் பலர் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தேர்தலை பணிகளை அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு குழுக்களை நியமித்து, மும்முரமாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப மனு கடந்த 4ஆம் தேதி முதல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளுக்கான விருப்ப விண்ணப்பப்படிவத்தை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆர்வமுடன் பெற்று செல்கின்றனர்.
கடந்த 6 நாட்களில் 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். நாளையுடன் விருப்பமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் பலர் இன்றும் விருப்ப மனுக்களை பெற்றுச் செல்கின்றனர்.
Discussion about this post