இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கிராண்ட் ஹோம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.
Discussion about this post