இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கிராண்ட் ஹோம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். இதனையெடுத்து இந்திய அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
Discussion about this post